நியூயார்க் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஸ்பெயினைச் சேர்ந்த பிரபல பன்னாட்டு நிறுவன நிர்வாகி, அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 persons of family died in helicopter crash
உலகளவில் தொழில்துறைக்கு தேவையான மெகா ஆட்டோமெட்டிக் இயந்திரங்களை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சிமென்ஸ் நிறுவனம்.
அதன் மூத்த நிர்வாகியாக பணியாற்றி வருகிறார் அகஸ்டின் எஸ்கோபார். அவர் தனது மனைவி மெர்ஸ் காம்ப்ருபி மோன்டல் மற்றும் 4, 5, 11 வயதுடைய மூன்று குழந்தைகளுடன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் நியூயார்க்கில் பிரபலமான ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தனது குடும்பத்தினருடன் நேற்று மதியம் சென்றிருந்தார்.

அதன்படி ’பெல் 206’ என பெயரிடப்பட்ட ஹெலிகாப்டரில் டவுன்டவுன் ஸ்கைபோர்ட்டில் இருந்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4 மணியளவில் புறப்பட்டு தெற்கே பறந்து மன்ஹாட்டன் கடற்கரையை பார்வையிட்டனர்.
பின்னர் ஹோபோக்கன் துறைமுகத்தை நோக்கித் திரும்புகையில், கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் இரண்டாக உடைந்து நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் விழுந்தது.
இதனையடுத்து ஹெலிகாப்டர் விழுந்த பகுதிக்கு உடனடியாக சென்ற மீட்புப் படையினர், சம்பவ இடத்தில் இருந்து எக்ஸ்காபர் குடும்பத்தினர் மற்றும் விமானி உட்பட 6 பேரை மீட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய இருவர் மருத்துவனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், அவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நியூயார்க் நகர மேயர் யூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
டிரம்ப் வருத்தம்! 5 persons of family died in helicopter crash
இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஹட்சன் நதியில் ஏற்பட்ட பயங்கரமான ஹெலிகாப்டர் விபத்தில் விமானி, இரண்டு பெரியவர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் என ஆறு பேர் உயிரிழந்தனர் என அறிந்தேன். விபத்தின் காட்சிகள் பயங்கரமானவை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதொடர்பாக தற்போது நடந்துவரும் விசாரணைக்கு பிறகு விபத்து குறித்த முழு அறிக்கை வெளியிடப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.