மாமல்லபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது அங்கிருந்தவர்கள் கட்டையை கொண்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து சொகுசு கார் ஒன்று, இன்று(நவம்பர் 27) மதியம் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது.
மாமல்லபுரம் அருகே பண்டித மேடு பகுதியில் இந்த கார் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரம் அமர்ந்திருந்த 5 பெண்கள் மீது அதிகவேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் பண்டிதமேடு கிராமத்தைச் சேர்ந்த விஜயா, யசோதா, லோகாம்பாள், கௌரி, ஆனந்தம்மாள் ஆகியோர் என்பதும் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டு சாலையோரம் அமர்ந்திருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய இரண்டு இளைஞர்களை பிடித்து கட்டையால் தாக்கி தர்ம அடி அடித்துள்ளனர் பண்டிதமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த விபத்து தொடர்பாக திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
எம்.எஸ்.ஸைக் கொண்டாட வழிகோலிய டி.எம்.கிருஷ்ணா
உருவாகிறது ஃபெங்கல் புயல்… 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!