அரசு பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 people death in government bus lorry accident
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகை பெட்ரோல் பங்க் எதிரே இந்த விபத்து நடந்துள்ளது. ஆர்.கே. பேட்டை அடுத்த அம்மையார் குப்பம் பகுதியில் இருந்து அரசுப் பேருந்து ( பேருந்து எண் -டி48) 40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.
அப்போது திருத்தணியில் இருந்து ஆர்.கே. பேட்டை நோக்கி 3.30 மணி அளவில் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி, அரசு பேருந்தின் மீது மோதியதில் முன் பக்கமும் வலது பக்கமும் முழுவதுமாக சேதமடைந்தது.
இந்த கோர விபத்தில் பேருந்து பயணிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பேருந்துக்குள் சிக்கிய பயணிகளை 2 ஜேசிபி மூலம் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு வெளியே மீட்டனர். 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 15 பேருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, திருத்தணி தாசில்தார் மலர்விழி ஆகியோர் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். 5 people death in government bus lorry accident