ADVERTISEMENT

பொடுகுத் தொல்லையால் அவதியா? இந்த 5 வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணி பாருங்க..

Published On:

| By Santhosh Raj Saravanan

5 home remedies for dandruff

பொடுகு பிரச்னையால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில், அதனை எளிமையாக விரட்ட ஐந்து வீட்டு வைத்திய முறைகளை பார்க்கலாம்.

தலைமுடிப் பிரச்னைகளில் முதன்மையானது பொடுகுத் தொல்லையாகவே உள்ளது. உடலுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் கூட பொடுகு என்பது பலரையும் நாள்தோறும் நேரடியாக பாதிக்கிறது. குறிப்பாக மழை மற்றும் குளிர்காலமான தற்போது பொடுகுத் தொல்லை வழக்கத்தை விட அதிகரிக்கும். தலையை சொறிந்தவுடன் வெள்ளை நிறத்தினால செதில் செதிலாக பொடுகு வருவதை பார்க்கும்போது பலருக்கு எரிச்சல் ஏற்படாமல் இல்லை. தலைசீவும்போது சட்டையில் வெள்ளை, வெள்ளையாக பொடுகுகள் விழுகின்றன. பொடுகு காரணமாக முடி உதிர்வு அதிகம் ஏற்படுவதால் அது மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.

ADVERTISEMENT

தலைமுடி வறட்சியை போக்க எண்ணெய் தடவுவது நன்றாக இருந்தாலும் கூட, பொடுகை ஏற்படுத்தும் பூஞ்சைகள் எண்ணெய்யை உண்பதால் அது நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. கடும் மன உளைச்சலை ஏற்படுத்தும் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களைப் பார்ப்போம்.

கற்றாழைச் சாறு

ADVERTISEMENT

நம் ஊர்களில் மிக சாதாரணமாக கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்றான ஆலுவேரா எனப்படும் கற்றாழை. இது ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசராக உள்ளது. இது பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக போராடுகிறது. எனவே, பொடுகை எதிர்த்துப் போராடுவதற்கு இது ஒரு சரியான தீர்வாக உள்ளது. கற்றாழையில் உள்ள பச்சை பகுதியை சீவிய பிறகு கிடைக்கும் வெள்ளை நிற ஜெல்லை தலையில் தேய்த்து குளித்து வர பொடுகில் இருந்து நிவாரணம் பெறலாம்.

எலுமிச்சை சாறு

ADVERTISEMENT

கற்றாழை போலவே எலுமிச்சை பழங்களும் நமக்கு எளிதாகக் கிடைக்கும். இறந்த சரும செல்களை நீக்கும் பண்பு எலுமிச்சை சாற்றுக்கு உள்ளது. அமிலத்தன்மை கொண்டதாகவும் உள்ளதால் தலையின் pHஅளவையும் மேம்படுத்துகிறது. பொடுகை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்தும் எலுமிச்சை சாறு போராடுகிறது. எலுமிச்சை சாறை நேரடியாக தலையில் தேய்த்து குளிப்பதால் எந்த பிரச்னையும் இல்லை.

சமையல் சோடா

எலுமிச்சை சாறு போலவே பேக்கிங் சோடாவும் உச்சந்தலையில் இறந்த செல்களை அகற்றக்கூடிய பண்பு உள்ளது.
இது பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. பேக்கிங் சோடாவை ஈரமான கூந்தலில் தடவி, உச்சந்தலையில் மசாஜ் செய்து, சில நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பொடுகை விரட்டும் தயிர், தேன்

தயிரில் புரோபயாடிக்குகள் நிறைந்திருப்பதால் உச்சந்தலைக்கு மிகவும் நல்லது. தேனிலும் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. தயிர் மற்றும் தேன் ஆகிய இரண்டையும் கலந்து உச்சந்தலையில் மாஸ்க் போன்று தடவி, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இது பொடுகில் இருந்து விடுபட முக்கியமான வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும்.

வேப்பிலை

சருமப் பராமரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மிக முக்கிய பொருட்களில் ஒன்று வேப்பிலை. வேப்பிலைகளை எடுத்து அதனை மைய அரைத்துக்கொள்ள வேண்டும். வேப்பிலை பேஸ்ட்டை பொடுகுத் தொல்லை உள்ள இடங்களில் தடவி பிறகு குளிக்க வேண்டும். பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை வேப்பிலை கொண்டுள்ளது. இதனால் பொடுகு எளிதில் தலையை விட்டு அகலும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share