கூகுள், உலகின் மிகப்பெரிய இணையத் தேடு பொறியாக உள்ளது. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கானவர்கள் கூகுள் பொறியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சில இணையங்களில், இணையதளத்தை பயன்படுத்துபவரின் அந்தரங்க விவரங்கள், வங்கிக் கணக்குகள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதுதொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த கூகுள் புதிய தொழில்நுட்பமுறை ஒன்றை உருவாக்கியுள்ளது. இதற்கு ‘கூகுள் புரொடெக்ட் பிரவுசிங் டெக்னாலஜி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் ‘பாதுகாப்பற்ற இணைய தளங்களின்’ யுஆர்எல்-ஐ ஆராயும். யூசர்கள் இந்த இணையத்தை பயன்படுத்தத் தொடங்கும்போது, ‘கூகுள்’ எச்சரிக்கைத் தகவல்களை அனுப்பும். இந்த வசதி மொசில்லா ஃபயர்பாக்ஸ், ஆப்பிள் சபாரி போன்ற தேடு பொறிகளிலும் பயன்படும்.
கூகுளில் புதிய வசதி
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
