IND vs ZIM: அபார வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய இந்தியா

Published On:

| By Selvam

இந்தியா – ஜிம்பாப்வே இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4வது போட்டி ஹராரே மைதானத்தில் ஜூலை 13 அன்று நடைபெற்றது.

இதற்கு முன், இந்த 2 அணிகள் விளையாடிய 3 போட்டிகளில், 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, 2-1 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும், இப்போட்டியில் இந்திய அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே அறிமுகம் செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு, துவக்க ஆட்டக்காரர்கள் வெஸ்லி மாதவெரே 25 ரன்களும், டடிவனாஷி மருமானி 32 ரன்களும் சேர்த்து நல்ல துவக்கம் அளித்தனர்.

அடுத்து வந்த அந்த அணியின் கேப்டன் ஷிகந்தர் ராஸா 28 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார். ஆனால், தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்களை பறிகொடுத்து வெளியேற, ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது.

இதை தொடர்ந்து 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்க ஆட்டக்காரர்கள் யசஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், இந்திய அணி விக்கெட்டே இழக்காமல் 16வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

யசஸ்வி ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 93 ரன்கள் விளாசியிருந்தார். இதற்காக, அவருக்கு இந்த போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதும் வழங்கப்பட்டது. மறுமுனையில், சுப்மன் கில் 39 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்திருந்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம், இந்திய அணி 3-1 என இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரின் கடைசி டி20 போட்டியில், இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இதே ஹராரே மைதானத்தில் ஜூலை 14 இன்று மோதிக்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: பற்களைப் பளபளப்பாக்க 10 வழிகள்!

டாப் 10 நியூஸ்: அமித்ஷா மத்திய பிரதேச பயணம் முதல் இளையராஜா இசை கச்சேரி வரை!

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: பனீரை எப்படிப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது?

சம்விதான் காய திவாஸ் Vs மோடி முக்தி திவாஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share