ADVERTISEMENT

4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல்: 1 மணி நிலவரம்!

Published On:

| By indhu

4th phase of parliamentary elections: 1 o'clock status!

4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் இன்று (மே 13) நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்தவகையில், ஏற்கனவே 3 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, 4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உள்ளிட்ட மொத்தம் 96 தொகுதிகளில் இன்று (மே 13) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், ஆந்திரப்பிரதேசம் – 25 தொகுதிகளுக்கும், தெலுங்கானா – 17 தொகுதிகளுக்கும், பீகார் – 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் – 4 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா – 11 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசம் – 8 தொகுதிகளுக்கும், ஒடிசா – 4 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசம் – 13 தொகுதிகளுக்கும், மேற்குவங்கம் – 8 தொகுதிகளுக்கும் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஓரிரு தொகுதிகளில் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில், 4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி, மொத்தமாக 10.35 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

ADVERTISEMENT

மேலும், 11 மணி நிலவரப்படி 24.87 சதவீத வாக்குகள் மொத்தமாக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி, மாநிலவாரியாக

  • மேற்கு வங்கம் – 51.87%
  • மத்தியப் பிரதேசம் – 48.52%
  • ஜார்கண்ட் – 43.80%
  • தெலுங்கானா – 40.38%
  • ஆந்திரப் பிரதேசம் – 40.26%
  • உத்தரப் பிரதேசம் – 39.68%
  • ஒடிசா – 39.30%
  • பீகார் – 34.44%
  • மகாராஷ்டிரா – 30.85%
  • ஜம்மு – காஷ்மீர் – 23.57%

என மொத்தமாக பிற்பகல் 1 மணிவரை 40.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஏர்டெல் நிறுவனத்தின் அசத்தலான ப்ரீபெய்டு திட்டங்கள்!

விஜய்யின் “The GOAT” இசை வெளியீட்டு விழா எங்க தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share