F
இந்திய சினிமாவின் பெருமை மிக்க நடனக் கலைஞராக வலம் வருகிறார் பிரபுதேவா. தமிழ் ரசிகனுக்கு, அவர் நடன கலைஞன் மட்டுமல்ல, ஆகச்சிறந்த நடிகரும் கூட. அதுமட்டுமல்ல, இயக்குநராகவும் ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட, பாலிவுட்டில் சல்மான்கான் நடிக்க ‘ராதே’ படம் இவரின் இயக்கத்தில் வெளியானது.
தமிழில் கமர்ஷியலாக ஹிட் கொடுக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். அப்படி, தமிழில் பஹீரா, யங் மங் சங், பொன்மாணிக்க வேல், தேள், ஊமை விழிகள் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்த லிஸ்டில் புதிதாக ஒரு படமும் இணைகிறது.
கடந்த 2018ல் பிரபு தேவா, ஹன்சிகா, ரேவதி நடிப்பில் வெளியான படம் குலேபகாவலி. காமெடி கலந்த ஆக்ஷன் படமாக இருந்தது. இந்தப் படத்தை கல்யாண் இயக்கியிருந்தார். படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. பொதுவாக, ஒரு இளம் இயக்குநரின் படம் வெளியாகி வெற்றி பெறவில்லையென்றால், அந்த இயக்குநருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காது. குறிப்பாக, நடிகரே அந்த இயக்குநரை ஓரம் கட்டிவிடுவார். இப்படியான சூழலில், குலேபகாவலி படத்தில் ஃப்ளாப் கொடுத்த இயக்குநர் கல்யாணுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் பிரபுதேவா.
இயக்குநர் கல்யாணுக்கு சினிமா லைஃப் கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதாலும், அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையினாலும் மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் பிரபுதேவா என்கிறார்கள் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர்.
**- ஆதினி**
�,