67 தமிழக மீனவர்களில் 42 பேர் விடுதலை!

Published On:

| By christopher

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள  67 தமிழக மீனவர்களில் புதன்கிழமை விடுதலையான 4 பேர் உட்பட இதுவரை 42 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து கடந்த அக்டோபர் 14 மற்றும் 28ஆம் தேதிகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 67 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT

இவர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி இரண்டு நாட்களாக தங்கச்சிமடத்தில் மீனவர் சங்கத்தினரின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

முதல் நாள் புதிய  தமிழகம் கட்சியின் நிறுவனர்  கிருஷ்ணசாமி வருகை தந்து ஆதரவு தந்த நிலையில்,  இரண்டாவது நாளாக திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் வருகை தந்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், மன்னார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட 38 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மொத்தம் 67 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை விடுதலையான 4 பேர் உட்பட இதுவரை 42 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலையான மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஓரிரு நாட்களில் தமிழகம் வரவுள்ளனர்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை:  ஜவாஹிருல்லா கோரிக்கை!

பியூட்டி டிப்ஸ்: ‘ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்’ – உடலில் ஏற்படும் தழும்புகளை நீக்க முடியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share