நாகர்கோவிலில் பழுதாகி பாதி வழியில் நின்ற பேருந்தை மாணவிகளை வைத்து தள்ள வைத்த 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 25 ஆம் தேதி காலை கல்லூரி மாணவிகள் பயணித்த அரசு பேருந்து (36M) கேப் ரோடு பகுதியில் உள்ள பழைய தாலுக்கா அலுவலகம் அருகே சென்ற போது பழுதாகி நடுவழியில் நின்றது.
கல்லூரிக்கு செல்ல நேரமானதால் மாணவிகள் பேருந்தில் இருந்து இறங்கி அதனை தள்ளி இயங்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மற்றும் சாலையில் மேலும் சில பேரும் மாணவிகளுடன் இணைந்து பேருந்தை தள்ளியுள்ளனர்.
சிறிது தூரம் தள்ளிச் சென்ற பிறகு மீண்டும் பேருந்து இயங்க தொடங்கியது. இதையடுத்து உற்சாகமடைந்த மாணவிகள் மீண்டும் பேருந்தில் ஏறி கல்லூரிக்கு சென்றனர்.
இந்த நிலையில் பழுதாகி நின்ற பேருந்தை மாணவிகள் இறங்கித் தள்ளிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதனை சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் மாணவிகளை பேருந்தை தள்ள வைத்த ஓட்டுநர், நடத்துநர், சூப்பர்வைசர் உள்ளிட்ட 4 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது போக்குவரத்துக் கழகம்.
மோனிஷா
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: நடிகை வரலட்சுமிக்கு என்ஐஏ சம்மன்!

Comments are closed.