தமிழகத்தில் புதிதாக 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நடப்பு கல்வி ஆண்டிலேயே தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.4 new arts and science college
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்களால் தமிழ்நாட்டில் மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கடந்த 26.05.2025 அன்று உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தசூழலில் மாணவர்களின் நலன் கருதி மேலும் 4 புதிய அரசு மற்றும் கலை கல்லூரிகளை திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இன்று (மே 30) காலை அரசு வெளியிட்ட அறிவிப்பில், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இக்கல்வியாண்டில் (2025-2026) மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உயர்கல்வித் துறை சார்பில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் இப்பகுதியிலுள்ள 1,120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 new arts and science college
