4 மாத அகவிலைப்படி… அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!

Published On:

| By Kavi

4 months of dearness allowance

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு இன்று (மே 16) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 4 months of dearness allowance

நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அரசு ஊழியர்களுக்காக 9 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

ADVERTISEMENT

அதில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

 “01-01-2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படியினை மத்திய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் . இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் தமிழக அரசு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது,தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத (ஜனவரி – ஏப்ரல் 2025) அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை (DA Arrears) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 4 months of dearness allowance

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share