ADVERTISEMENT

ஆவடி அருகே சோகம்.. நாட்டு வெடி வெடித்ததில் 4 பேர் பலி

Published On:

| By Pandeeswari Gurusamy

4 killed in explosion near Avadi

சென்னை ஆவடி அருகே நாட்டு வெடி வெடித்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் வீடு ஒன்றில் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று நாட்டு வெடி வெடித்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வீடு முழுவதும் தரைமட்டமாகி உள்ளது. இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் ஆவடி தீயணைப்பு மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நாட்டு வெடி விபத்து ஏற்பட்டது குறித்தும், உயிரிழந்தவர்களின் விரங்கள் குறித்தும், சமூக விரோத செயல்களுக்கான நாட்டு வெடி தயாரிக்கப்பட்டதாக என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share