கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பாஜகவினைரை போலீசார் இன்று (மார்ச் 7) கைது செய்தனர்.
தமிழ்நாடு பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்தவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார். இவர் கடந்த 5ம் தேதி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
கட்சியில் இருந்து விலகியதுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான கடும் குற்றச்சாட்டுக்களையும் அறிக்கையாக வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவரைத்தொடர்ந்து பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து, மேலும் சில பாஜக நிர்வாகிகளுடன் இன்று அதிமுகவில் இணைந்தார்.
இந்த சம்பவங்கள் ஒரே கூட்டணியில் இருந்து வரும் அதிமுக-பாஜக இடையே கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இருகட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கடும் வார்த்தைப்போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கூட்டணி தர்மத்தினை மீறி பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதை கண்டித்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே பாஜக இளைஞரணியைச் சேர்ந்த 4 பேர் போராட்டம் நடத்தினர்.
அப்போது முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்தும், செருப்பு காலால் மிதித்தும் போராட்டம் நடத்தினர். மேலும் எடப்பாடிக்கு எதிராக கோஷமும் எழுப்பினர்.
இதனையடுத்து இதையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி, மாவட்ட பொருளாளர் பொன்ராஜ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
பெண்களுக்கு ரூ.1000: மகளிர் தின வாழ்த்து செய்தியில் அறிவித்த முதல்வர்
தமிழ்நாட்டில் வெற்றிபெற பாஜகவுக்கு தான் தயவு தேவை: அதிமுக விமர்சனம்