தவெகவில் 5 அதிமுக மாஜி அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!

Published On:

| By Mathi

TVK AIADMK Ex Ministers

அதிமுகவின் (AIADMK) முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைகின்றனர்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் பல தொகுதிகளில் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய செயலாளர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான

  • கடம்பூர் ராஜூ
  • உடுமலை ராதாகிருஷ்ணன்,
  • கடலூர் எம்.சி. சம்பத்
  • பல்லடம் எம்.எஸ்.எம். ஆனந்தன்
  • என்.ஆர்.சிவபதி ஆகியோர் முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகின்றனர்

கோவில்பட்டி தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை (2011, 2016, 2021) போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்ற பெருமை கடம்பூர் ராஜூவுக்கு உண்டு.

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடுமலை கே. ராதாகிருஷ்ணன் உடுமலைப்பேட்டை தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை (2016, 2021) களம் கண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கடலூர் மாவட்டத்தின் மூத்த தலைவரான எம்.சி. சம்பத் 2001-இல் நெல்லிக்குப்பம் தொகுதியிலும், பின்னர் 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் கடலூர் தொகுதியிலும் நின்று மொத்தம் மூன்று முறை வெற்றி பெற்றவர்.

ADVERTISEMENT

திருப்பூர் பகுதியைச் சேர்ந்த பல்லடம் எம்.எஸ்.எம். ஆனந்தன் 2011-இல் திருப்பூர் வடக்கு தொகுதியிலும், பின்னர் 2021-இல் பல்லடம் தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக வென்றவர்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த என்.ஆர். சிவபதி 1991 சட்டமன்றத் தேர்தலில் தொட்டியம் தொகுதியிலும், அதன் பிறகு 2011 தேர்தலில் முசிறி தொகுதியிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றியைப் பெற்றவர்.

அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்

  1. பாப்பிரெட்டிபட்டி கோவிந்தசாமி
  2. சங்ககிரி சுந்தரராஜ்
  3. வீரபாண்டி ராஜமுத்து
  4. ஸ்ரீவில்லிப்புத்தூர் மான்ராஜ்
  5. கலசப்பாக்கம் பன்னீர்செல்வம்
  6. சிவகாசி ராஜவர்மன்
  7. ஆற்காடு விகேஆர் சீனிவாசன் ஆகியோரும் தவெகவில் இன்று இணைகின்றனர்.

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ. கருணாநிதி இன்று தவெகவில் இணைகிறார்.

இதேபோல அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமானோர் விலகி தவெகவில் இணைகின்றனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share