தமிழ் சினிமாவின் கவனமெல்லாம் விஜய்-யின் ‘தெறி’ மீதுதான் இருக்கிறது. ஏப்ரல் 14ல் ரிலீஸாகும் தெறி படத்தைத் தொடர்ந்து, பரதனுடன் விஜய் கமிட் ஆகியிருக்கும் படம்வரை பரபரப்பான செய்திகள்தான். தற்போது, லிங்காவில் ரஜினிக்கு வில்லனாக நடித்த ஜகபதி பாபுவை விஜய்-யின் 60வது படத்தில் வில்லனாக ஓ.கே. செய்துள்ள தகவல் வெளியாகி, மீண்டும் விஜய்-யை சினி டவுனின் பேச்சில் புரள வைத்திருக்கிறார்கள். அப்படி என்ன விஜய்-யின் 60வது படம் சிறப்பு வாய்ந்துவிட்டது. இவர்களைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். அழகிய தமிழ் மகன் மாதிரியான தோல்விப் படத்தைக் கொடுத்த இயக்குநருக்கு மீண்டும் வாய்ப்புக் கொடுத்தது, இரண்டே படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புக் கொடுத்தது என விஜய் தரப்பில் பாராட்டை ஏற்றுக்கொள்ளவும் நியாயம் இருக்கிறது. அதேசமயம், தெறி திரைப்படத்தின் ட்ரெய்லரையே 10 மில்லியன்பேர் பார்த்திருக்கிறார்கள்.
விஜய்-க்கு வில்லன்!
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
