இஸ்ரேல் – ஹமாஸ் போர்: இதுவரை பாலஸ்தீனர்கள் 38,011 பேர் பலி!

Published On:

| By christopher

38011 Palestinians Killed in Israel-Hamas War

கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக நடக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 38,011 பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரின் அக்டோபர்-7 தாக்குதலை அடுத்து இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்தது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த போரில் காசாவில் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் மட்டுமல்லாமல் அப்பாவி பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக கிடைக்கும் தகவலின் அடிப்படையில் மக்கள் வசிக்கும் இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான் தாக்குதல் நடத்துகிறது. இதனால் உயிர்ப்பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58 பேர் கொல்லப்பட்டதாகவும், இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 38,011 ஆக உயர்ந்திருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக நடக்கும் இந்த சண்டையில் 87,000-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கிறது.

உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களில் ஹமாஸ் போராளிகள் எத்தனை பேர், எத்தனை பேர் மக்கள் என்று விளக்கமாக தெரிவிக்கவில்லை. ஆனால், இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று குறிப்பிட்டுள்ளது.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: நீங்களே தயாரிக்கலாம் நேச்சுரல் கலரிங் ஹேர் டை!

டாப் 10 நியூஸ் : ராகுலின் ஹத்ராஸ் பயணம் முதல் ‘கூலி’ ஷூட்டிங் ஆரம்பம் வரை!

கிச்சன் கீர்த்தனா : மட்டன் தோசை

காற்று மாசுபாட்டால் டெல்லியில் ஆண்டுக்கு 12,000 பேர் உயிரிழப்பு

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share