300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: 36 பேர் பலி!

Published On:

| By Monisha

36 killed in jammu kashmir bus accident

காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 36 killed in Jammu Kashmir bus accident

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் படோடி – கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் JK02CN-6555 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து 55 பயணிகளுடன் இன்று (நவம்பர் 15) சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்து ட்ருங்கல் – அசார் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது சறுக்கி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

“ஓட்டுநரின் கவனக்குறைவால் சாலையில் உள்ள கிராஸ் பாரில் மோதி, பேருந்து பள்ளத்தில் சறுக்கி விழுந்திருக்கிறது” என்று உள்ளூர் போலீஸ் அதிகாரி சுனில் குப்தா கூறியுள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் 36 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 19 பேர் காயமடைந்திருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தோடா மாவட்ட ஆட்சியர் ஹர்விந்தர் சிங் உடன் தொலைபேசியில் பேசினேன். இந்த விபத்தில் துரதிருஷ்டவசமாக 36 பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தோடா அரசு மருத்துவமனை மற்றும் ஜம்முவில் உள்ள பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

நிவாரண நிதி

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் நடந்த பேருந்து விபத்து வேதனை அளிக்கிறது. தங்களின் நெருங்கிய உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 36 killed in Jammu Kashmir bus accident

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

பயிர் காப்பீடு: ஸ்டாலினுக்கு எடப்பாடி வலியுறுத்தல்!

IND vs NZ: இந்தியாவுக்கு சாதகமாக பிட்ச் மாற்றப்பட்டதா? – பரபரப்பு புகார்!

50வது சதம்… சச்சினின் 2 பெரிய சாதனைகளை முறியடித்த கோலி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share