பீகாரில் உள்ள கிராமத்தில் இருபுறமும் சாலைகள் இல்லாத நிலையில், திறந்தவெளியில், 35 அடி பாலம் கட்டியது கிராம மக்களை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள ராணிகஞ்ச் கிராமத்தில், இருபுறமும் சாலை இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல், திறந்தவெளியில் 35 அடி பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலம் எதற்காக என்பது குறித்து பலருக்கும் ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அதிகாரிகள், “முதல்வர் கிராமத்தின் சதக் திட்டத்தின் கீழ் பர்மானந்த்பூர் கிராமத்தில் 2.5 கிமீ சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், உள்ளூர் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் செயல்முறை முடிக்கப்படவில்லை. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாலம் இருக்கிறது.
மேலும், அங்கு சாலை அமைக்கப்பட்ட பிறகு வயலின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் தண்ணீர் செல்ல அனுமதிக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சாலை பணிகளுக்காக ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் பாலம் கட்டப்பட்டது, ஆனால், அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் முடிக்கப்படாததால் அருகில் சாலை அமைக்கப்படவில்லை” என்று கூறியுள்ளனர்.
வயல்வெளியில் கட்டப்பட்டுள்ள பாலம் குறித்து பேசியுள்ள உள்ளூர்வாசிகள்,
“இந்தத் திட்டத்தைப் பற்றி கிராம மக்களுக்கு எந்த தகவல்களும் தெரியாத நிலையில், ஒரு வயலின் நடுவில் எதற்காக மேம்பாலம் கட்டியுள்ளனர்? இந்தப் பாலம் ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இது ஏதேனும் ஒரு பெரிய திட்டமாக இருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால், இதுவரை எந்த வேலையும் செய்யப்படாததால், எதிர்கால திட்டமிடல் பற்றிய குறிப்பு எதுவும் இல்லாததால், அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம்” என்று கூறியுள்ளன.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : காளான் மலபாரி!
இதுக்கு தகுதி நீக்கம் பண்ணுவாங்கலா?: அப்டேட் குமாரு