ADVERTISEMENT

“வாழ்க்கையில ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா”… அஜித்தின் 32 ஆண்டுகள் பயணம்!

Published On:

| By Selvam

நடிகர் அஜித் குமார் திரையுலகில் 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அவர் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 1993-ம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் வணிக முக்கியத்துவம் உள்ள நடிகரான அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார்.

ADVERTISEMENT

32 Years of Actor Ajith Kumar

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் சினிமாவில் அறிமுகமாகி 32 ஆண்டுகள் ஆனதை கெளரவித்து நினைவு கூறும் வகையில் விடாமுயற்சி படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ரத்தம் வழியும் தோற்றத்துடன் கூடிய அஜித் குமார் புகைப்படத்தில்  32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும், யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

32 Years of Actor Ajith Kumar

ADVERTISEMENT

 

அதேபோல ‘குட் பேட் அக்லி’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டரில், “32 ஆண்டுகால மன உறுதி, தைரியம், ஒழுக்கம், கண்ணியம் மற்றும் நல்லது, கெட்டது ஆகியவற்றுடன் கோரமான பயணங்களை சந்தித்துள்ள அஜித் குமார் இன்னும் பல ஆண்டுகள் புகழ் பெற வாழ்த்துகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாடு நிதியுதவி… நன்றி தெரிவித்த பினராயி

பியூட்டி டிப்ஸ்: உங்கள் எடை கூடுவதாக உணர்கிறீர்களா?

வழுக்கி விழுந்ததே வயநாடு!

டாப் 10 நியூஸ் இந்தியா Vs இலங்கை ஒருநாள் போட்டி முதல் நாம் தமிழர் ஆர்ப்பாட்டம் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share