ஆகஸ்ட் 15க்குள் 30 லட்சம் வேலைகள்… இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்த ராகுல்

Published On:

| By Kavi

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பும் பணி தொடங்கும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.

இந்த முறை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமா அல்லது மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தச்சூழலில் பிரதமர் மோடி காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மறுபக்கம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்வதோடு மட்டுமின்றி வீடியோ வாயிலாக பிரதமருக்கு பதிலளித்தும், காங்கிரஸ் வாக்குறுதிகள் பற்றியும் பேசி வருகிறார்.

இந்நிலையில் ராகுல் காந்தி இன்று (மே 9) சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள 55 நொடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில்,   “நாட்டின் இளைஞர்களே!  ஜூன் 4ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் அரசு வேலைகளை நிரப்புவோம் என்று உறுதி அளித்துள்ளோம்.

அதன்படி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புப் பணிகளைத் தொடங்குவோம்.

எனவே, நரேந்திர மோடியின் பொய்ப் பிரச்சாரங்களில் கவனம் சிதறாமல்,  உறுதியாக இருங்கள். வெறுப்பைத் தேர்ந்தெடுக்காதீர்கள்… வேலைவாய்ப்பை தேர்ந்தெடுங்கள்…” என்று இந்தியில் கூறியுள்ளார்.

முன்னதாக மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ்,

  • நீட், க்யூட் தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பத்திற்கு ஏற்றபடி நடத்திக்கொள்ளலாம்.
  • மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
  • மகளிருக்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம் மகாலட்சுமி திட்டத்தின் மூலம் வழங்கப்படும்
    மத்திய அரசில் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்

எனப் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தவறான முன்னுதாரணமாகிவிடும்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கூடாது: ED

இந்திரா காந்தியின் சாயல்…பிரியங்காவின் அரசியல் எழுச்சி…உத்திரப் பிரதேசத்தில் மீண்டெழுகிறதா காங்கிரஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share