10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 ரூபாய் நாணயங்கள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி போன்ற சில மாவட்டங்களில் மட்டுமே பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளன.
மற்ற மாவட்டங்களில் இந்த நாணயத்தை பலர் வாங்க மறுப்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் நிகழ்வாக இருக்கிறது. 10 ரூபாய் நாணயங்களை அரசுப் பேருந்துகளிலோ, கடைகளிலோ வாங்க மாட்டோம் என்று சொன்னால், அவர்களுக்கு எதிராகப் புகார் அளிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆனால், இந்த நாணயத்தை பலர் வாங்க மறுப்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் நிகழ்வாக இருக்கிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம். வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பண பரிமாற்றத்தின்போது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ, பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும். அதனால், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
குழந்தைகளுக்கான நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளில் உலோகத் துண்டுகள்: அதிர்ச்சியில் மக்கள்!