அனுமதியின்றி தனிநபர் படங்களை வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை!

Published On:

| By Kavi

3 years Jail for posting individual pictures

https://twitter.com/chennaipolice_/status/1828749593368047757?

தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைதளங்களில் வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது மூன்று லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 (Information Technology Act, 2000) ஒருவரின் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தல், குழந்தைகளைப் புகைப்படம் எடுத்தல், பெண்களைத் தவறான முறையில் புகைப்படம் எடுத்தல், ஒருவரின் அனுமதியின்றி தகவல்களைப் பரிமாறுதல், எலெக்ட்ரானிக் சாதனங்களின் முறைகேடுகள் பற்றிய சட்டதிட்டங்களை உள்ளடக்கியது.

ஒரு பொது இடத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றாலும் அங்கு முறையான அனுமதி பெற்ற பிறகுதான் செய்ய வேண்டும். அனுமதியின்றி பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காணொலிகளைப் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின்படி குற்றமாகும்.

இந்த நிலையில், சமூக வலைதளப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூக வலைதளத்தில் தனி உரிமையினை காக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66இன்படி, தனி நபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைதளங்களில் வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக புகா ர் அளிக்க தேசிய சைபர் க்ரைம் உதவி எண் 1960 அளிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள் : சான்பிரான்சிஸ்கோவில் முதல்வர் உரை முதல் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வரை!

கிச்சன் கீர்த்தனா: ட்ரை ஃப்ரூட் – பைனாப்பிள் ரோல்!

அம்பானியின் கனிவான கவனத்திற்கு… அப்டேட் குமாரு

பொன் மாணிக்கவேல் கைது?: சிபிஐ தீவிரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share