ஈரானில் காணாமல் போன இந்தியர்கள்… என்ன நடந்தது?

Published On:

| By Minnambalam Desk

3 indians are missing in iran - what happened?

ஈரான் நாட்டில் மூன்று இந்தியர்கள் காணாமல் போன சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நாட்டின் வெளியுறவுத் துறை இந்திய மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 3 indians are missing in iran – what happened?

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த யோகேஷ் பாஞ்சால், முகமது சதீக் மற்றும் சுமித் சுட் ஆகிய மூவர், ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி ஈரானுக்குச் சென்றனர்.

ADVERTISEMENT

அவர்கள் டிசம்பர் 2024 மற்றும் ஜனவரி 2025 நாட்களில் ஈரானுக்கு சென்றுள்ளனர். ஆனால், ஈரானில் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, அவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை (MEA) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ‘யோகேஷ் பாஞ்சால், முஹம்மது சதீக், சுமித் சுட் ஆகிய மூவரும் 2024 டிசம்பர் முதல் 2025 ஜனவரி வரை ஈரானுக்குச் சென்றதாக உறுதிப்படுத்தியுள்ளது. இவர்கள் குடும்பத்தினர், சில மிரட்டும் அழைப்புகள் மற்றும் பிற தொலைதொடர்பு தகவல்களால், அவர்கள் கட்டாயமாகக் காவலில் வைத்திருக்கப்படலாம் என்ற சந்தேகத்தை தெரிவித்துள்ளனர். இந்தியத் தூதரகம் அவர்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈரானிய அதிகாரிகளுடன் தீவிரமாக பணியாற்றி வருகிறது’ என்றார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக ஈரானின் இந்தியத் தூதரகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,
“இந்தச் சம்பவத்தின் தன்மையை கருத்தில் கொண்டு, வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக அங்கீகாரம் இல்லாத நபர்கள் அல்லது சட்டவிரோத இந்திய ஏஜென்ட்கள் வழங்கும் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று இந்தியக் குடிமக்களுக்கு வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த மூன்று இந்தியர்கள் ஈரான் தலைநகரமான தெஹரானில் காணாமல் போனது தொடர்பாக, ஈரான் அரசு தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை, ஈரானின் நீதித்துறை அதிகாரிகளுடன் இணைந்து நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக தெஹரானில் உள்ள இந்தியத் தூதரகம் தொடர்ந்து தகவலறிந்து வருகிறது. ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தூதரகக் கவுன்சில் பிரிவும் இந்த விவகாரத்தில் நேரடியாக தொடர்பில் உள்ளது.

இது தொடர்பாக ஈரானுக்கான இந்திய தூதரகம் X இணையதளத்தில் பகிரப்பட்ட மற்றொரு செய்தியில், “இந்த மூன்று இந்தியர்களின் காணாமல் போன விவகாரம் ஈரானின் வெளிநாட்டுப் பணிக்குழுவின் கவுன்சில் பிரிவால், நீதித்துறை அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இந்தியத் தூதரகம் நேரடி தகவல்களை பெறுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share