கொந்தளிப்பை ஏற்படுத்திய 3 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்- கிழித்து எறிந்த எதிர்க்கட்சிகள்!

Published On:

| By Mathi

Parliament

நாடாளுமன்றத்தில் கடந்த 2 நாட்களில் 3 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

1) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக, ‘விக்சித் பாரத் ராம்ஜி திட்டம் (VB G RAM G)’ என்ற புதிய 100 நாள் வேலைத் திட்ட மசோதா

ADVERTISEMENT

2) காப்பீட்டு சட்ட திருத்த மசோதா

3) அணுசக்தி மசோதா

ADVERTISEMENT

ஆகிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

100 நாள் வேலை திட்ட மசோதா

ADVERTISEMENT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (MGNREGA) மாற்றி அமைக்க வகை செய்யும் மசோதாதான், விபி ஜிராம் ஜி- Viksit Bharat Guarantee Rozgar and Ajeevika Mission Gramin – VB G RAM G. நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமையன்று அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பின. இம்மசோதா விவாதத்தை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் புதன்கிழமையன்று தொடங்கி வைத்தார். இதன் மீது வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணி வரை விவாதம் நடைபெற்றது. இம்மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியா கூட்டணி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சைக்குரிய இந்த மசோதாவின் நகலை கிழித்து எறிந்தனர். பின்னர் மாநிலங்களவையிலும் இம்மசோதா நிறைவேறியது. மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்கியது, திட்ட செலவை மாநிலங்கள் மீது சுமத்தியது உள்ளிட்டவை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு முக்கிய காரணம்.

அணுசக்தி மசோதா

நாட்டின் அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க வகை செய்கிறது இந்த மசோதா. இதன் பெயர் அணுசக்தி மேம்பாடு ஷாந்தி – SHANTI மசோதா. மக்களவையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் இம்மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் போது பாதிப்புகளுக்கான நட்ட ஈடு வழங்குவதில் இருந்து அந்நிறுவனங்களை இம்மசோதா பாதுகாக்கிறது என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. ஆனாலும் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

காப்பீட்டுச் சட்ட திருத்த மசோதா

இம் மசோதாவானது காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடியது. இந்த மசோதாவும் நேற்று முன்தினம் மக்களவையிலும் பின்னர் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share