ADVERTISEMENT

எஸ்3 வெளியீட்டு தேதி

Published On:

| By Balaji

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் எஸ்3. அதன் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம், இம்மாதம் குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என தகவல் வந்திருந்தது.ஆனால் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராடி வந்தனர். இயல்பு நிலை திரும்பாததால் வெளியீட்டு தேதி வரும் பிப்ரவரி மாதம் 3 என அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

சிங்கம் படத்தின் முதல் இரண்டு பாகங்கள் தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது. ஆனால் தெலுங்கு திரையுலகில் தற்போது தொடர்ந்து 3 படங்கள் வெளிவந்துள்ளதால் திரையரங்குகள் இல்லாத காரணத்தாலும் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share