காசாவில் ஐந்து ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் பலி!

Published On:

| By Selvam

29 killed in Gaza including five journalists

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கும் நிலையில், கொல்லப்பட்டவர்களில் ஐந்து பாலஸ்தீன ஊடகவியலாளர்களும் அடங்குவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 38,098 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 87,705 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது காசா மருத்துவமனைகளில் எரிபொருள் நெருக்கடி நிலவி வருகிறது. மருத்துவமனைகளுக்குள் பல துறைகளில் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிக்கன நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஜூன் 27 அன்று வெளியிடப்பட்ட இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை மற்றும் வெளியேற்ற உத்தரவைத் தொடர்ந்து கிழக்கு காசா நகரத்திலிருந்து சுமார் 80,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கும் நிலையில், கொல்லப்பட்டவர்களில் ஐந்து பாலஸ்தீன ஊடகவியலாளர்களும் அடங்குவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொல்லப்பட்ட ஐந்து ஊடகவியலாளர்களின் பெயர்கள் காசா அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டனர் என்று காசா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: நேரம் கடந்து சாப்பிடுபவரா நீங்கள்?

சண்டே ஸ்பெஷல்: சமையலுக்கு தினசரி தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது நல்லதா?

வாங்குற வாண்டி: அப்டேட் குமாரு

“மூன்று சட்டங்களே மோடி ஆட்சியை மாற்றும்”: உண்ணாவிரதத்தில் ஆ.ராசா ஆவேசம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share