உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் 28 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 28 one time plastics ban at ootty kodaikanal
கோடை தொடங்கிவிட்ட நிலையில் கொடைக்கானல், உதகை போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது உயர் நீதிமன்றம் இன்று புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி, உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில், ஒருமுறை பயன்படுத்தும் கேரி பேக்குகள், ஸ்ட்ராக்கள், கப் மற்றும் டம்ளர்கள், கரண்டி, கத்தி, தட்டுகள் உள்ளிட்ட 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தடையை மீறி பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும் மேலும் குடிநீர் பாட்டில்கள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சுற்றுலா பைகளை வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தலாம் எனவும் உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.