சென்னை வேளச்சேரியிலுள்ள தனியார் விடுதியில் 60 வயது முதியவருடன் தங்கி இருந்த 27 வயது இளம்பெண் பலியான சம்பவத்தில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஜோதி என்பவருக்கும் வில்லிவாக்கத்தை சேர்ந்த சசிகலா என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். சசிகலாவின் 2வது மகள் ரம்யா என்பவர் கணவனை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து தங்கி இருந்துள்ளார். அப்போது முதியவர் ஜோதியுடன் ரம்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது..
நேற்று முன்தினம் மாலை ரம்யாவும், ஜோதியும் வேளச்சேரிக்கு சென்று தரமணி சாலையில் உள்ள விடுதியில் வந்து அறை எடுத்து தங்கியுள்ளளனர். ரம்யாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. விடுதிக்கு வரும்போதே 6 பீர் பாட்டில்கள் வாங்கி வந்துள்ளனர். இரவில் ரம்யா 4 பீர் குடித்துள்ளார். பின்னர் இருவரும் உறங்கியுள்ளனர்.
நள்ளிரவில் திடீரென எழுந்த ரம்யா நெஞ்சு வலிப்பதாக கூறி உள்ளார். டாக்டரிடம் செல்லலாமா? என முதியவர் கேட்டுள்ளார். பின்னர், காலையில் எழுந்து மீண்டும் எஞ்சியிருந்த 2 பாட்டில் பீர் குடித்துள்ளார். இதனால், அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து , ஜோதி அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரம்யா இறந்துவிட்டதாக தெரிவித்து விட்டனர்.
வேளச்சேரி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் ரம்யா இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“பெண்களுக்கு பாதுகாப்பில்லா சமூகம், ஒருபோதும் விடுதலை அடையாது” : கனிமொழி
”என் பிறந்தநாள் வேண்டுகோள் இதுதான்” : தொண்டர்களுக்கு உதயநிதி கடிதம்!