பாகிஸ்தான் அருகே குஜராத் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற 2,500 தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாப்பாக மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 300-க்கும் மேற்பட்ட படகுகளில் குஜராத் அருகே ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இந்தியா- பாகிஸ்தான் இடையே குஜராத்தின் ஆழ்கடல் பரப்பில் 300 படகுகளில் 2,500 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்த தருணத்தில்தான் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் உருவானது. இந்த யுத்த சூழல் அறியாமல் தொடர்ந்தும் ஆழ்கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் 2,500 பேர் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மீனவர்களின் சில படகுகளில் மட்டும்தான் செயற்கைக்கோள் தொலைபேசி இருக்கிறது; இதனால் 2,500 மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
