25 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்கிறது!

Published On:

| By christopher

25 toll booths to increase the toll!

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

நாடெங்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன. இதில் தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன.

ஆண்டுதோறும் இந்த சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் மக்களவை தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி தேர்தல் முடிந்து ஜுன் மாதத்தில் ஒரு சில சுங்கச்சாவடிகளில் மட்டும் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. அப்போது 5 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் உள்பட 25 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1 ஆம்தேதி முதல் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படும் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இந்த சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியது வரும் எனச் சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வாகை சூடிய வாழை… மூன்று நாள் வசூல் நிலவரம் என்ன?

”ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத என்னை பற்றி பேச எடப்பாடிக்கு எந்த தகுதியும் கிடையாது” : அண்ணாமலை ஆவேசம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share