தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

Published On:

| By Monisha

25 tamilnadu fisherman arrested

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகத் தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று நேற்று (ஜூன் 21) கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மண்டபத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு, புதுக்கோட்டையை சேர்ந்த இரண்டு விசைப்படகு, நாகையை சேர்ந்த ஒரு விசைப்படகு என மொத்தம் நான்கு விசைப்படகுகளையும் 25 தமிழக மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் காகேசந்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

ஒரே நாளில் 25 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மோனிஷா

விஜய் பிறந்தநாளில் லியோ போஸ்டர்!

உக்ரைன் சீரமைப்புக்காக மூன்று பில்லியன் டாலர் வழங்கும் ரிஷி சுனக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share