நான் முதல்வன்’ திட்டம் : லண்டன் செல்லும் மாணவர்கள்…. வாழ்த்திய முதல்வர்!

Published On:

| By Kavi

தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், தமிழக கல்லூரி மாணவர்கள் 25 பேர் நேற்று (ஜூன் 9) சென்னையில் இருந்து சிறப்புப் பயிற்சிக்காக லண்டன் சென்றனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில், “சிறகுகள் விரியட்டும், மகிழ்ச்சி” எனப் பதிவிட்டு  வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தமிழக முதல்வரின் கனவு திட்டமான, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியரின் தனித்திறன்களை கண்டறிந்து, அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது, லண்டனின் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

பிரிட்டிஷ் கவுன்சிலுடன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு, தமிழகத்தில் உள்ள 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்காக, கல்லூரிகள் மூலம் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை திறன் மேம்பாட்டுக் கழகம் பெற்றது. அப்போது பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் பெற்ற 1,267 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.

ADVERTISEMENT

அவர்களுக்கு பல திறனாய்வு தேர்வுகளை நடத்தி, அதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின், அந்த 100 பேருக்கும் ஆன்லைன் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

அதில் சிறப்பாக செயல்பட்ட 25 மாணவ, மாணவியர் லண்டன் செல்ல தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வரும் ஜூன் 16-ம் தேதி வரை லண்டனில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிலையில், மாணவர்கள் நேற்று சென்னையில் இருந்து லண்டன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் பேராசிரியர்கள் இருவரும் லண்டன் சென்றனர்.

நேற்று லண்டன் புறப்பட்ட மாணவ மாணவியரை பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தனர்.

முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த மாணவர்களை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் அதிகாரிகள் வரவேற்று அழைத்துச்சென்றனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், “சிறகுகள் விரியட்டும், மகிழ்ச்சி” எனப் பதிவிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: தொடர் தும்மல்… நிறுத்துவது எப்படி?

பியூட்டி டிப்ஸ்: இளவயதில் கருவளையங்கள்… எளிமையான தீர்வு உண்டா?

கிச்சன் கீர்த்தனா: வெஜ் ரோல் சப்பாத்தி!

அக்கா ஒரு ஐடியாவோட வந்துருக்கு போல : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share