பள்ளி வேன் விபத்து: 25 மாணவிகள் உட்பட 32 பேர் படுகாயம்!

Published On:

| By christopher

நெல்லையில் பள்ளி வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உட்பட 32 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பிற்கு உட்பட்ட 25 மாணவ, மாணவிகள் மற்றும் 5 ஆசிரியர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதற்காக பாளையங்கோட்டை அண்ணா மைதானத்திற்கு இன்று (ஆகஸ்ட் 25) காலை வேனில் சென்றுள்ளனர்.

ADVERTISEMENT

விளையாட்டு பயிற்சிகள் அனைத்து முடிந்த நிலையில் அனைவரும் மாலையில் வள்ளியூருக்கு திரும்பியுள்ளனர்.

ஆனால் வேன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் 25 மாணவ, மாணவிகள், 5 ஆசிரியர்கள், ஓட்டுநர் உள்ளிட்ட 32 பேர் படுகாயம் அடைந்தனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ADVERTISEMENT

அதில் படுகாயமடைந்த 3 மாணவர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல் வகாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

தொடர்ந்து விபத்து குறித்து பாளையங்கோட்டை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வேன் ஸ்டியரிங் ராட் கட் ஆனதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

சரவணன்

விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்க முயற்சி: மேலும் ஒருவர் கைது!

World Championship: ஒரே வீச்சில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நீரஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share