காவல்துறை உயர் அதிகாரிகள் 24 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 8) உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி,
சென்னை மாநகர நுண்ணறிவுப் பிரிவு காவல் துணை ஆணையராக சக்தி கணேசன் ஐபிஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக சுஜித் குமார் ஐபிஎஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் காவல் துணை ஆணையராக ஹரி கிரண் பிரசாத் ஐபிஎஸ் மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக பகுயா சினேகா பிரியா ஐபிஎஸ் மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வ நாகரத்தினம் ஐபிஎஸ் மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை பூ மார்க்கெட் காவல் துணை ஆணையராக சுந்தர வடிவேல் ஐபிஎஸ் மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை கோயம்பேடு காவல் துணை ஆணையராக சுப்புலெட்சுமி ஐபிஎஸ் மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற காவல் துணை ஆணையராக ரமேஷ் பாபு ஐபிஎஸ் மாற்றப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கீதாஞ்சலி ஐபிஎஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து 14 மாவட்டங்களுக்கு புதிய எஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மகேஸ்வரன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிராபகர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மதிவாணன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜாண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆதர்ஷ் பச்சேரே ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பெரோஸ் கான் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கெளதம் கோயல் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நிஷா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஷ்ரேயா குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருண் கபிலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறைமாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மதிவாணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“உங்கள் மதிப்பு வெற்றிகளால் அளவிடப்படுவதில்லை” : வினேஷ் போகத்துக்கு நயன்தாரா ஆலியா பட் ஆறுதல்!
வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் : எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!