தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜூலை 27-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 22,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். Candidates Driver Bus
தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகங்களில் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
தற்போது 3,274 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 364
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 318
விழுப்புரம் கோட்டத்தில் 322
கும்பகோணம் கோட்டத்தில் 756
சேலம் கோட்டத்தில் 486
கோவை கோட்டத்தில் 344
மதுரை கோட்டத்தில் 322
நெல்லை கோட்டத்தில் 362
என மொத்தம் 3,274 ஓட்டுநர்கள், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக மொத்தம் 22,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த பணியிடங்களுக்கு ஜூலை 27-ந் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து செய்முறைத் தேர்வு நடைபெறும். சென்னை அண்ணா பல்கலைக் கழகம், இந்த தேர்வுக்கான வினாத்தாளை தயாரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 15 தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. ஹால் டிக்கெட்டுகளை ஜூலை 21-ந் தேதி முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
