தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாதால் 214 பணயக்கைதிகளை தூக்கில் போட்டதாக பலூச் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத் தலைநகர் குயிட்டாவில் இருந்து கடந்த 11 ஆம் தேதி பெஷாவர் நோக்கி சென்று கொண்டிருந்த ஜாபர் ரயில் போலான் பஸ் என்ற இடத்தில் வைத்து பலூசிஸ்தான் சுதந்திர ராணுவத்தினரால் கடத்தப்பட்டது இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் 30 மணி நேரம் கிளர்ச்சியாளர்களுடன் சண்டையில் ஈடுபட்டனர். முடிவில் 21 பயணிகள், 4 பாதுகாப்புப்படையினர் பலியாகினர். 33 கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர். 214 hostages executed
இதற்கிடையே, பயணிகள் மீட்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவம் பொய் சொல்வதாகவும், தற்போதும் அவர்களுடன் தாங்கள் சண்டையிட்டு வருவதாகவும் பலூசிஸ்தான் சுதந்திர ராணுவம் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்து. இதையடுத்து, இன்று பாகிஸ்தான் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாததால் 214 பயணிகளை தூக்கில் போட்டதாக மற்றொரு அறிக்கையை பலூச் ராணுவம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பலூச் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஜீயந்த் பலூச் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ சுதந்திர போரில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் எங்கள் வீரர்களை விடுவிக்க கோரி 48 மணி நேரம் கெடு விதித்திருந்தோம்.இதுதான் கடைசி வாய்ப்பு என்றும் கூறியிருந்தோம். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் பிடிவாதமாகவும் ஆணவமாகவும் நடந்து கொண்டது. 214 hostages executed
இதனால், பணயக்கைதிகளாக இருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 214 பேரை தூக்கிலிட்டோம். சர்வதேச போர் விதிகளின்படிதான் நாங்கள் செயல்பட்டோம். பாகிஸ்தான் அரசு அப்படி செயல்படவில்லை. பாகிஸ்தான் அரசின் பிடிவாதத்துக்கு 214 உயிர்கள் விலையாக கொடுக்கப்பட்டது.
எதிரிகளால் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடலை கூட மீட்க முடியவில்லை. எங்களை எதிர்த்து போரிடவும் முடியவில்லை. பாகிஸ்தான் ராணுவத்துடனான போர் இன்னும் முடியவில்லை. அது தீவிரமடைந்துள்ளது. எதிரிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளனர். எங்கள் தரப்பில் 12 வீரர்கள் சுதந்திரத்துக்காக உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது. ‘
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.