வண்டலூர் பூங்காவில் உயிரிழந்த ஆண் புலி: காரணம் என்ன?

Published On:

| By Selvam

வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி உயிரிழந்துள்ளது. வயது மூப்பு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் வங்கப்புலி விஜயன் உயிரிழந்ததாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும், விஜயன் என்கிற 21 வயது ஆண் வங்கப்புலியானது, கடந்த மாதம் 24-ம் தேதி முதல் உணவு உட்கொள்ளுதலைக் குறைத்துக் கொண்டது. இதன் காரணமாக படிப்படியாக அதன் உடல்நிலை சரியில்லாமல் போனது. புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன் வங்கப்புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி  ஆண் புலி உயிரிழந்துள்ளது.  வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்ததில் விஜயனின் பங்கு அதிகம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராஜ்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: அதிக அளவு பப்பாளிப்பழம் சாப்பிடுவது: ஆரோக்கியமா? ஆபத்தா?

ADVERTISEMENT

கிச்சன் கீர்த்தனா: மட்டன் கறி ஆனம்

அண்ணாமலையின் கதவு, ஜன்னல் அண்ட்…. ; அப்டேட் குமாரு

IPL: ஆரம்பம் முதல் இன்று வரை… தோனி வாங்கிய சம்பளம் எவ்வளவு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share