புகையிலைக்கு அடிமையான பள்ளி மாணவர்கள்: அதிர்ச்சித் தகவல்!

Published On:

| By Kavi

21 percent of school students addict tobacco

மாநில பொது சுகாதார இயக்குநரகம் நடத்திய புதிய ஆய்வில், நாமக்கல் மாவட்ட உயர்நிலை பள்ளி மாணவர்கள் 21 சதவிகிதம் பேர் புகையிலையை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. 21 percent of school students addict tobacco

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில்,  பள்ளி மாணவர்கள் புகையிலை பயன்படுத்துவது தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

நாமக்கல்லின் எர்ணாபுரம் தொகுதியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மொத்தம் 300 மாணவர்களிடம், புகையிலை பயன்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 

இந்த 300 பேரில் 21 சதவிகிதம் அதாவது  63 மாணவ மாணவிகள் புகையிலை பயன்படுத்தியது தெரியவந்தது. இதில் 51 பேர் ஆண்கள். 12 பேர் பெண்கள் ஆவர். இந்த ஆய்வின் போது 9 மாணவர்கள் மட்டுமே  கேள்விதாள் அடிப்படையில் புகைப்பழக்கம் இருப்பதை ஒப்புக்கொண்டிருக்கின்றனர். 

மற்ற 42 மாணவர்கள் மற்றும் 12 மாணவிகளிடம் ரசியமாக நேர்காணல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு புகையிலை பயன்படுத்தும் பழக்கம் இருப்பதை ஒப்புக்கொண்டனர். 

மாணவர்களிடையே புகையிலை பயன்பாடு குறித்த ஆய்வில், பெரும்பான்மையானவர்கள், அதாவது 76% (63 மாணவர்களில் 48 பேர்) புகையற்ற புகையிலையை பயன்படுத்துவதும் ,  12 பேர் சிகரெட் பிடிப்பதும் , 3 பேர் பீடி  பிடிப்பதும்  தெரியவந்துள்ளது. 

இந்த 63 பேரில் 5% மாணவர்கள் ஒரு வருடமாகவும்,  41% பேர் மூன்று வருடங்களாகவும், 43% பேர் நான்கு ஆண்டுகளாகவும்,   5% பேர் ஐந்து ஆண்டுகளாகவும் புகையிலை பழக்கத்தை கொண்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. 16% மாணவர்கள் வாரத்திற்கு 2-3 முறை புகையிலையைப் பயன்படுத்துவதாகவும், 28% பேர் வாரத்திற்கு 4-5 முறை புகையிலையைப் பயன்படுத்துவதாகவும், பெரும்பான்மையானவர்கள், 56% பேர் வாரத்திற்கு ஐந்து முறைக்கு மேல் புகையிலையைப் பயன்படுத்துவதாகவும்  தெரிவித்திருக்கின்றனர். 

இந்த மாணவர்கள் ஏழை – நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களாக இருந்துள்ளனர். 

பெரும்பாலான மாணவர்கள்  புகையிலை பயன்பாட்டை தொடங்கியது கோவிட்-19 ஊரடங்கு காலத்துடன் தொடர்புடையது  என இந்த ஆய்வு கூறுகிறது. 

இந்த ஆய்வு மாணவர்களின் எதிர்காலம் மற்றும் உடல்நலன் குறித்த அபாயத்தை அடிகோடிட்டு காட்டுகிறது.

எனவே இளம் பருவத்தினரிடையே புகையிலையை பயன்படுத்துவதைத் தடுக்க, சுகாதார பாதிப்புகள் குறித்து ஆரம்ப கல்வியிலேயே சொல்லிக் கொடுப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. 21 percent of school students addict tobacco

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share