வரும் 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா சாவா போன்றது என கட்சியினர் மத்தியில் கே.பி.முனுசாமி இன்று (நவம்பர் 19) பேசினார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகி வருகிறது. அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு செய்து டிசம்பர் 7ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என கள ஆய்வுக் குழுவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கடந்த சில நாட்களாக அக்குழுவில் இடைபெற்றுள்ள 11 பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி தலைமையில் அரியலூர் மாவட்டத்தில் கள ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
அதில் அவர் பேசுகையில், “வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா சாவா போன்றது. அதிமுகவின் கவுரவம், எம்ஜிஆர், ஜெயலலிதா புகழ் 2026 தேர்தலில் வெற்றி பெற்றால் தான் நமக்கு எளிதாகும். நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்றால் சிறிய கட்சிகள் மேலே வரும் நிலை ஏற்படும்.
இன்றைய அரசியல் களத்தில் கட்சிகள் அதிகரித்து விட்டதால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று வாக்காளர்களின் சிந்தனை 2 கட்சியில் இருந்து 4 கட்சிகளுக்கு மாறியுள்ளது. இப்போது நாம் உஷாராக இருக்க வேண்டும்” என்று கே.பி.முனுசாமி பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”அதிமுக கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்கிறார்கள்” : திண்டுக்கல் சீனிவாசன் பளீர்!
ஆன்லைன் மோசடி : மீண்டும் ஏமாற நாடு தாண்டும் இளைஞர்கள்!
40 முறை சிறை சென்றவர்… யார் இந்த மைக் டைசன்?