2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் டிசம்பர் 18-ந் தேதி விருப்ப மனு கொடுத்தவர்கள்:
- ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி விருப்ப மனு தந்தார்.
- செஞ்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விழுப்புரம் பாசறை மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் விருப்ப மனு கொடுத்தார்.
- அதிமுக மாதவரம் கிழக்கு பகுதி செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் M.கண்ணதாசன் மாதவரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார்.
- திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கவுன்சிலர் ஜனார்த்தனன் விருப்ப மனு வழங்கினார்.
- அதிமுக மாணவரணி சிவகங்கை மாவட்ட தலைவர் முத்துக்குமார் நாகராஜன் பரமக்குடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தந்தார்.
- -பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக அம்மா பேரவை துணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சதன் பிரபாகரன் விருப்ப மனு வழங்கினார்.
- வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் விருப்ப மனு வழங்கினார்.
- வேடசந்தூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், மாணவரணி மாநில பொருளாளர் கோகுல் கௌதம் விருப்ப மனு வழங்கினர்
- பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட மாவட்ட மாணவரணி செயலாளர் வேம்பை ஆர்.கண்ணன் விருப்ப மனு கொடுத்தார்.
- தஞ்சாவூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் V.தியாகராஜன் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார்.
- -பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர்.ஜவகர் பாபு விருப்ப மனுத் தாக்கல்.
