2026 தேர்தல்: அதிமுகவில் ‘விறுவிறு’.. முதல் நாளில் 1,237 பேர் விருப்ப மனு- யார் யார் எந்த தொகுதி?

Published On:

| By Mathi

AIADMK

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து நேற்று 1237 பேர் மனு அளித்துள்ளனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நேற்று (டிசம்பர் 15) முதல் அதிமுக விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது.

ADVERTISEMENT
  • தமிழகத்தில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு கட்டணம் ரூ15,000; புதுச்சேரி விருப்ப மனு கட்டணம் ரூ5,000
  • முதல் நாளான நேற்று1,237 பேர் விருப்ப மனு அளித்தனர்.
  • இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என 349 பேர் விருப்ப மனு அளித்தனர்
  • முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், காமராஜ் உள்ளிட்ட 888 பேர் தாங்கள் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
  • தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள சிவி சண்முகம், விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.
  • மாதவரம் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி விருப்ப மனு கொடுத்தார்
  • மதுராந்தகம், செய்யூர் தொகுதிகளில் போட்டியிட அதிமுக எம்.பி தனபால் மனைவி காயத்ரி தனபால் விருப்ப மனு அளித்தார்.
  • வேளச்சேரி தொகுதியில் போட்டியிட வேளச்சேரி மேற்கு அதிமுக செயலாளர் எம்.ஏ. மூர்த்தி விருப்ப மனு கொடுத்தார்.
  • வானூர், திண்டிவனம் தொகுதிகளில் போட்டியிட விழுப்புரம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எஸ். கோகுல்ராஜ் மனு அளித்தார்.
  • அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச் செல்வன் விருப்ப மனு தந்தார்.
  • காட்டுமன்னார்கோயில், திட்டக்குடி தொகுதிகளில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் விருப்ப மனு கொடுத்தார்.
  • திருமயம், அறந்தாங்கி தொகுதிகளில் போட்டியிட புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பிகே.வைரமுத்து விருப்ப மனு வழங்கினார்
  • மதுரையில் 10 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் எடப்பாடி போட்டியிட மருத்துவரணி இணைச் செயலாளர் பா.சரவணன் மனு கொடுத்தார். மதுரை வடக்கு, மதுரை மத்தி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தாம் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் அவர் மனு வழங்கினார்.
  • நன்னிலம் தொகுதியில் மீண்டும் போட்டியிட முன்னாள் அமைச்சர் காமராஜ் விருப்ப மனு கொடுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share