7% பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு : நிர்மலா சீதாராமன்

Published On:

| By Kavi

மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக ஆதிகரித்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறுயுள்ளார்.

2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்,

ADVERTISEMENT

“நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்துள்ளோம். கவர்ச்சியான திட்டங்களை விட மக்கள் நலனே முக்கியம் என்று பிரதமர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் சீரிய நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக ஆதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

3 கடமைகளை மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது மக்கள் நலன், அனைவருக்கும் அனைத்தும்,  இளைஞர்கள் நலன் ஆகிய கடமைகளை கொண்டதுதான் இந்த பட்ஜெட்.

மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வறுமைக் குறைப்பு மற்றும் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய உதவியுள்ளன.

ADVERTISEMENT

நீடித்த வளர்ச்சி, நிலைத்தன்மை, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share