தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பிப்ரவரி 17-ந் தேதி தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
நாட்டின் 2-வது மிகப் பெரிய மாநிலம் தமிழ்நாடு
உணவு உற்பத்தியில் வளர்ச்சி அடைந்துள்ளோம்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு திமுக ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது
ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது
செயற்கை நுண்ணறிவு இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும்
தமிழர் பெருமையை பறைசாற்றும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
21 அயல்மொழிகளில் பெரியாரின் சிந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன; அம்பேத்கர் நூல்கள் எளிய பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளன.
திசைதோறும் திராவிடம் திட்டத்தின் கீழ் 74 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐநா மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெறுகின்றன.
285 கோடி ரூபாய் தமிழர் வரலாற்று அருங்காட்சிகள் அமைக்கப்பட உள்ளன.
ரூ.630 கோடியில் இலங்கை தமிழர்களுக்கு 10,460 வீடுகள் கட்டித் தரும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக உள்ளது மகளிர் உரிமைத் தொகை திட்டம். இத்திட்டம் தடையின்றி நீடிக்க ரூ5,000 அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையை வழங்கிய போது நாடே திரும்பிப் பார்த்தது.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
881 கோடி முறை பெண்கள், கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணித்தனர்.
பெண்களை ஓதுவார்களாக நியமித்தது தமிழக அரசு.
அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இதுவரை 6.95 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
6.23 லட்சம் குழுக்கள் ₹1.41 லட்சம் கோடி வங்கிச்டன் உதவி பெற்றுள்ளன.
பிரசவகால உயிரிழப்புகள் தமிழகத்தில் மிக குறைவு
ஊர்க்காவல் படையில் திருநங்கைகள் சேர அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மூத்த குடிமக்களுக்கு அன்புச் சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
19 இடங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்களுக்கு ரூ1471 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.5,463 கோடி நிதி ஒதுக்கீடு
பள்ளி கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு
38 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
உயர் கல்வித் துறைக்கு ரூ. 8,505 கோடி ஒதுக்கீடு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு
சிறப்பு திட்ட செயலாக்கத்துக்கு ரூ17,088 கோடி
ஊரக வளர்ச்சி- உள்ளாட்சி துறைக்கு ரூ.28,687 கோடி ஒதுக்கீடு.
நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.28,227 கோடி
தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,996 கோடி நிதி ஒதுக்கீடு
மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.22,090 கோடி நிதி ஒதுக்கீடு
இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதன்மை மாநிலம்
சிறு குறு தொழில்துறைக்கு ரூ.1,943 கோடி
ஐடி துறைக்கு ரூ219 கோடி ஒதுக்கீடு
எரிசக்தி துறைக்கு ரூ.18,091 கோடி நிதி ஒதுக்கீடு
6 புதிய வனவிலங்கு சரவணாலயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைகள் துறைக்கு ரூ.21,132 கோடி நிதி ஒதுக்கீடு
சுற்றுலா துறைக்கு ரூ.1,394 கோடி நிதி ஒதுக்கீடு
கால்நடை-மீன்வளம்- பால்வளத் துறைக்கு ரூ.4,435 கோடி ஒதுக்கீடு
கூட்டுறவு- வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ.7,547 கோடி நிதி ஒதுக்கீடு
பொதுப்பணித் துறைக்கு ரூ.1,694 கோடி ஒதுக்கீடு
