-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மின்னம்பலம் நேயர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
இந்த 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் உள்ள கிரஹ நிலைகள் மற்றும் திருக்கணிதப்படி நடக்க உள்ள சனிப்பெயர்ச்சி மற்றும் திருக்கணிதம் மற்றும் வாக்கியமுறைகளில் ஏற்பட உள்ள குரு, ராகு கேது பெயர்ச்சிகளின் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான ராசி பலன்களை பார்க்கலாம்.
மேஷம்
ஏற்றமும் மாற்றமும் ஏற்படக் கூடிய ஆண்டு இது. அதேசமயம், எதிலும் திட்டமிடலும் சோம்பலின்மையும் அவசியம். அலுவலகத்தில் உங்கள் பெருமை பேசப்படும். மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். பதவி, பொறுப்புகள் அதிகரித்து மகிழ்ச்சி சேர்க்கும். பேச்சுக்கு மதிப்பு கூடும். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு சீராகும்.
பழைய கடன்கள் சுலபமாக அடைபடும். வாரிசுகளால் பெருமை உண்டாகும். வீடு, வாகன யோகம் உண்டாகும். வர்த்தகத்தில் வளர்ச்சி உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் நிதானம் முக்கியம். அயல்நாட்டு வர்த்தகத்தில் அவசரம் வேண்டாம். அரசாங்கப் பணிபுரிபவர்கள் திறமைக்கு உரிய ஏற்றம் பெறுவீர்கள். அரசியலில் உள்ளோரின் செல்வாக்கு அதிகரிக்கும். எந்த சமயத்திலும் வாக்குறுதிகளை யோசித்துச் சொல்லுங்கள்.
மாணவர்கள் சோம்பலை உதறூங்கள். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் யோகம் உண்டு. சினிமா, இசை, படைப்புத்துறையினரின் முயற்சிகள் பலிதமாகும். பயணம் செல்லும்போது வேகத்தைத் தவிருங்கள். அடிவயிறு, முதுகு, அஜீரணம், நரம்பு உபாதைகள் வரலாம். பிள்ளையார் வழிபாடும், பெருமாள் ஆராதனையும் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
3 மாவட்டங்களில் கனமழை: வானிலை அப்டேட்!
ஆஸ்திரேலியாவுடன் படுதோல்வி… இன்னும் WTC பைனல் ரேஸில் உள்ளதா இந்தியா?