2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள்: துலாம்!

Published On:

| By Kavi

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மின்னம்பல நேயர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

துலாம்
பெருமை அதிகரிக்கும் ஆண்டு. பொறுமையும் கவனமும் இருந்தால், முன்னேற்றமும் தொடர்ச்சியாகும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். தேவையற்ற வாக்குவாதம் எவருடனும் வேண்டாம்.

பதவி, ஊதியம் உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் வரும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு வரலாம். அயல்நாடு செல்லும் வாய்ப்பு தடைப்பட்டால் தளரவேண்டாம், அது நன்மைக்கே. வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். வாரிசுகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள். உறவுகள் யாரிடமும் வீண் உரசல் வேண்டாம்.

தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. விடுபட்ட முன்னோர் கடன்களை அவசியம் நிறைவேற்றுங்கள். பெண்கள்  திடீர் அதிர்ஷ்டத்தால் யோகம் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை இரவல் தரவோ பெறவோ வேண்டாம். பிறமொழி மனிதர்களிடம் அதிக நெருக்கம் தவிருங்கள்.

தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். அது தொடர்ச்சியாக இருக்க உழைப்பு மிக முக்கியம். தேவையற்ற வங்கிக் கடன்களைத் தவிருங்கள். அரசியலில் உள்ளவர்கள் முகஸ்துதி நபர்களை ஒதுக்குவது முக்கியம். பொது இடத்தில் வாக்குறுதிகளைத் தவிருங்கள்.

அரசுப்பணியில் உள்ளோர், நிதானமாகச் செயல்படுவது நல்லது. பணத்தைக் கையாள்வோர் நிதானத்துடன் இருப்பது முக்கியம். கலைஞர்கள், சினிமாத் துறையினர் வாய்ப்புகள் வரப்பெறுவீர்கள். படைப்பு ரகசியங்களை பிறரிடம் பகிர வேண்டாம்.

மாணவர்களுக்கு மதிப்பு உயரும். இரவில் வெளி இடங்களில் தங்க வேண்டாம். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். நரம்பு, எலும்பு, முதுகுத் தண்டுவடம், கண், பற்களில் உபாதை வரலாம். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு, சகல நன்மையும் தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள் : கன்னி!

இதுதான் ஜனநாயகமா?’ : தவெகவினர் கைதால் விஜய் ஆவேசம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share