-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மின்னம்பல நேயர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
சிம்மம்
திட்டமிட்டுச் செயல்பட்டால், தொடர்ச்சியாக நல்லவை நடக்கும் ஆண்டு. சோம்பல் தவிர்ப்பதும், நேரடி கவனமும் உயர்வுகளைத் தொடர்ச்சியாகக் கிட்டச் செய்யும். அலுவலகத்தில் திட்டமிட்டுச் செயல்பட்டால் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி சேர்க்கும்.
அனுபவம் மிக்கவர்கள் வார்த்தைகளை அவசியம் கேளுங்கள். பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள். வெளியூர் செல்லும் சமயத்தில் கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பொறுப்புகளில் நேரடி கவனம் செலுத்துங்கள்.
இல்லத்தில் இன்சொல் பேசுங்கள். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியத்தடைகள் நீங்கும். தேவையற்ற கட்ன் பெறவோ தரவோ வேண்டாம். பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். பெண்கள் அமைதியால் அதிக நன்மைகளைப் பெறலாம்.
அசையும் அசையா சொத்து சேரும். செய்யும் தொழிலில் பொறுப்பு உணர்வுடன் செயல்படுங்கள். ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் வளர்ச்சி சீராகும். செல்லும் நாடுகளின் சட்டதிட்டங்களை மதியுங்கள். அரசியலில் உள்ளவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.
அரசாங்கப் பணிபுரிவோர் மேலான நன்மைகளைப் பெறுவர். சினிமா, கலைத்துறையினர் வாய்ப்புகளை தொடர்ச்சியாகப் பெறுவீர்கள். எதிர்பாலரிடம் அதிக நெருக்கம் வேண்டாம். மாணவர்களுக்கு சோம்பல் கூடாது. வாகனப் பழுதில் அலட்சியம் கூடாது. திருவண்ணாமலை சுவாமி, அம்பாள் வழிபாடு சிறப்பான நன்மை தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆஸ்திரேலியாவுடன் படுதோல்வி… இன்னும் WTC பைனல் ரேஸில் உள்ளதா இந்தியா?