2024 தேர்தல் முடிவு : திமுக கூட்டணி முன்னிலை!

Published On:

| By Kavi

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. மொத்தம் 64.2 கோடி வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகிக்கிறார்.

நீலகிரி தொகுதியில் காலை 8.30 நிலவரப்படி திமுக வேட்பாளர் ஆ.ராசா,

மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்

திருச்சியில் திமுக கூட்டணியில், மதிமுக வேட்பாளர் துரை வைகோ,

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி,

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.ஆர்.பாலு

சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் என திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலையில் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் தற்போது வரை திமுக – 11 அதிமுக – 0 பாஜக – 0 ஆகிய இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வாக்கு எண்ணிக்கை : பாஜக – இந்தியா கூட்டணி முன்னணி நிலவரம் என்ன?

சிவகார்த்திகேயன் தயாரித்த ’குரங்கு பெடல்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share