2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.
மக்கள் மனதை வென்றவர்கள் யார்..? டெல்டா மண்டலத்தின் விவசாயக் களஞ்சியமான மயிலாடுதுறை தொகுதியில் தேர்தல் வெற்றியை அறுவடை செய்யப் போவது யார்?
டெல்டா மாவட்டங்களின் முக்கிய தொகுதியான மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா களம் காண்கிறார்.
அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.பவுன்ராஜின் மகன் பாபு போட்டியிடுகிறார்.
பாமக சார்பில் ம.க.ஸ்டாலின் போட்டியிட, நாம் தமிழர் சார்பில் பலராலும் அறியப்பட்ட காளியம்மாள் களம் காண்கிறார்.
டெல்டா மாவட்டத்தின் செழிப்பான மயிலாடுதுறை தொகுதியில் போட்டி, திமுக கூட்டணியின் காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் தீவிரமாக இருக்கிறது.
களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.
உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.
இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.
18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகவும் மக்களிடம் மின்னம்பலம் நடத்திய சர்வேயின் அடிப்படையில்…
காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் சுதா 45% வாக்குகள் பெற்று மயிலாடுதுறையில் முன்னிலையில் இருக்கிறார்.
அதிமுக வேட்பாளர் பாபு 26% வாக்குகளோடு இரண்டாவது இடத்திலும்,
பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 19% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெறுகிறார்கள்.
நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 9% வாக்குகளைப் பெறுகிறார்.
1% வாக்காளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.
ஆக மயிலாடுதுறையில் வெற்றியை காங்கிரஸே அறுவடை செய்கிறது.
மின்னம்பலம் நடத்தும் இந்த மெகா கருத்துக் கணிப்பில் மற்ற தொகுதிகளில் வெல்லப்போவது யார் என்ற முடிவுகளை அடுத்தடுத்து தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் minnambalam.com வலைதளத்தில்…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்?
மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்?
மின்னம்பலம் மெகா சர்வே: கரூரை கைப்பற்றப் போவது யார்?
மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்?