minnambalam mega survey vilupuram constituency

மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்?

40 தொகுதி மெகா சர்வே முடிவு அரசியல்

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.

பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார்.

திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்திண்டிவனம் (தனி) ,  விக்கிரவாண்டிதிருக்கோயிலூர்உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார். 

பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும், 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்….

மின்னம்பலம் மெகா சர்வே: மயிலாடுதுறை… வெற்றி அறுவடை யாருக்கு?

மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு?

மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *